ஊத்தங்கரை, ஜூலை 4 –
ஊத்தங்கரை அருகே 6 வருடங்களாக பூட்டியிருந்த அம்மன் கோயில் பல போராட்டங்கள் பிறகு தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் ஆடு பலியிட்டு திறந்தனர். தமிழ் புலிகள் கட்சி மாநிலத் துணை செய்தி தொடர்பாளர் வள்ளல் பாரி தெரிவித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அடுத்து வீரணகுப்பம் ஊராட்சி வெண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் 40 ஆண்டுகளாக கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தனிநபர் இந்த கோயிலிடம் தனக்கு சொந்தம் எனவும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று பூட்டியதால் கோயில் 6 வருடங்களாக திறக்காமல் உள்ளதால் கெட்ட ஆத்மாக்கள் ஊருக்குள் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர் என்பதால் உடனடியாக கோவில் திறந்து பூஜைகள் செய்து மாரியம்மன் ஆசியை பெற்றால்தான் நாங்கள் நலமுடன் நோய் நொடியின்றி இருக்க முடியும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் புலிகள் கட்சியின் தலைமையில் பூட்டிய கோவில் வளாகத்தில்
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வைத்து பொங்கல் வைத்து படையிலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து இன்று ஊர்பொதுமக்கள் பூட்டி கிடந்த கோவிலை தமிழ் புலிகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துளைப்பில் ஆடு பலியிட்டு பூட்டியிருந்த பூட்டை உடைத்து
திறந்து அம்மன் கோவில் வளாகம் மற்றும் கருவறையை சுத்தம் செய்து பொங்கல் வைத்து அம்மனுக்கு மாலை அணிவித்து அலங்கரித்து அபிஷேகம் செய்து கற்பூர தீபாதாரணை செய்து வழிபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், மத்தூர் காவல் ஆய்வாளர் பத்மாவதி உள்ளிட்ட உதவி காவல் ஆய்வாளர்கள் காவலர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பூவரசன், வடக்கு மாவட்ட செயலாளர் பாலாஜி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட துணை செயலாளர் முத்துப்பாண்டி, பர்கூர் ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய இளம்புலி செயலாளர் திருப்பதி, கம்யூனிஸ்ட் கட்சி நாகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி மற்றும் வேலு உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.