இரணியல், ஏப். 2 –
இரணியல் அருகே வடக்கு புள்ளி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் வேலப்பன் (78). இவருக்கு பேபி (72) என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக வேலப்பன் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனைவி மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறினார்.
நேற்று முன்தினம் இரவு ஏதோ விஷம் அருந்தி விட்டு வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்த அவரை மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


