விழுப்புரம், செப்டம்பர் 24 –
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூரியா பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் திருக்கோவியலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி , மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021 ஆம் ஆண்டு பசுமை தமிழ்நாடு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் தமிழ்நாட்டின் மரம் மற்றும் வனப்பரப்பை 33 சதவீதமாக 2030 ஆம் ஆண்டிற்குள் அதிகரித்திடவும், காலநிலை மாற்றதை எதிர்கொள்ளவும், இந்த முன்னோடி திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டம் துவங்கப்பட்டது. அந்தவகையில் பசுமை தமிழ்நாடு திட்டம் தொடங்கப்பட்ட நாளான இன்று வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு இந்த கல்லூரி வளாகத்தில் 70 நாவல் மரக்கன்றுகளை நட்டு வைக்கப்பட்டுள்ளது.
இங்க வந்துள்ள வேளாண்மை துறை மாணவர்கள் இயற்கை சூழலை நன்கு அறிந்து அனைவரும் மரம் வளர்த்து வரவேண்டும். மரம் வளர்பதற்கு பெரிய இடங்கள் தான் தேவை என்பது இல்லை. மாணவர்கள் அவரவர் வீடுகளிலே சிறிய இடம் இருந்தாலும் கூட அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்து வரலாம். இங்கு வந்துள்ள ஒவ்வொரு மாணவர்களும் மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து, வனப்பரப்பை 33 சதவீதமாக கொண்டுவர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்தார். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு பனை விதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.மா.ஜெயச்சந்திரன், தலைமை வனப்பாதுகாவலர் (விழுப்புரம் வன மண்டலம்) பெரியசாமி, சூரிய கல்வி குழுமம் தலைவர் திருமதி விசாலாட்சி பொன்முடி, விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், வனவியல் விரிவாக்க அலுவலர் விழுப்புரம் எம்.தர்மலிங்கம், விழுப்புரம் வனச்சரக அலுவலர் .எம்.அருள் ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



