தர்மபுரியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மூன்று சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை திருப்ப பெற மத்திய அரசை வலியுறுத்திமாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சிவன் தலைமையில் நடைபெற்றது.இதில் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்



