திருவெண்ணெய்நல்லூர், ஜுலை 03 –
விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவர் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் விதிகளை கடைபிடித்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றும் மேலும் கட்சி நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்த புதிய பொறுப்புக்கு பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதமசிகாமணி, ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர். விசுவநாதன், நகர செயலாளர் பூக்கடை கணேசன் ஆகியோருக்கு கிருஷ்ணராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் திமுக நிர்வாகிகள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.