விளாத்திகுளம், ஆகஸ்ட் 26 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதூர் முன்னாள் சேர்மன் சுசிலா தனஜெயன் மற்றும் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி ஆகியோர் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் செ. ராஜூ கலந்துகொண்டு 2026 தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்கி வீடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அழகாபுரியைச் சேர்ந்த திமுக நிர்வாகி மூக்கையா தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
மேலும் விளாத்திகுளம் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மோகன், நகரச் செயலாளர், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், போர்டு சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



