விளாத்திகுளம், நவம்பர் 11 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான வேலிடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த வலியன் என்பவர் மனைவி மாரியம்மாள். கடந்த வாரம் விளாத்திகுளம், வேம்பார் சாலையில் துப்புரவுப்பணி மேற்கொண்ட போது சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்காலிக தூய்மை பணியாளர் மாரியம்மாள் அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார். இந்நிலையில் இன்று முதல்வர் அறிவித்த நிவாரண நிதி ரூ.3 லட்சம் அடங்கிய காசோலையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தூய்மை பணியாளர் மாரியம்மாள் குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.



