சுசீந்திரம், ஆக. 7 –
சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் அரிய பெருமாள் விளையைச் சார்ந்தவர் சந்திரன். இவரது மனைவி செல்வ லட்சுமி (35). இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. குழந்தை இல்லை. இந்நிலையில் இவரது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்து வருகின்றார். நேற்று அரியபெருமாள்விளை பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சமையல் செய்வதற்காக விறகு எடுக்க செல்வ லட்சுமி சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த புத்தளம் உத்தாண்டன் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த சந்திரன் என்பவர் அவர் கையை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசி உள்ளார். இதனால் செல்வ லட்சுமி கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்து அங்கிருந்து சந்திரன் ஓடி வந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து செல்வ லட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.