ஈரோடு, செப். 29 –
ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் த.மா.கா சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமுக்கு மாநில பொது செயலாளர் யுவராஜா தலைமை தாங்கினார். த மா கா தலைவர் ஜி கே வாசன் இதை தொடங்கி வைத்தார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூரில் நடந்து விஜய் பிரசார கூட்டத்தில் 38 பேர் பலியான சம்பவம் மிகுந்த வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் எதனால் யாரால் நடந்தது என்பது குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சரியான முறையில் நேர்மையான நடுநிலையான முறையில் நடக்க வேண்டும். மேலும் சி பி ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், பொதுக் குழு உறுப்பினர் சந்திர சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



