கிருஷ்ணகிரி, ஆக.26:
பர்கூர் தெற்கு ஒன்றிய புளியம்பட்டி ஊராட்சி கழகம் சார்பில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா. தேமுதிக நிறுவனர், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா, கட்சியினரால் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விஜயகாந்தின் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு தேமுதிகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி கழகம் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேமுதிக ஒன்றியச் செயலாளர் பி. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். விழாவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர். சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.ஆர். பழனி முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் டி.எம். குமார் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட பொருளாளர் லட்சுமணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே. வேலு, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி. கணகன், மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், ஒன்றிய கழக துணைச் செயலாளர்கள் கலைமணி, மாதவன், கிளைக் கழகச் செயலாளர்கள் புளியம்பட்டி சிவகுமார், கீழ்குப்பம் மணிகண்டன், அத்திகனூர் முனியப்பன், கீழ்குப்பம் கிளை பொருளாளர் கருப்பண்ணன், அத்திகானூர் கிழக்கு கிளை அவைத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, புளியம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
இறுதியாக புளியம்பட்டி ஊராட்சி கழகச் செயலாளர் மணிவண்ணன் நன்றி தெரிவித்தார்.



