வாடிப்பட்டி, ஆகஸ்ட் 28 –
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விநாயகர் பக்தர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா 31-வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ஜெமினி பூங்கா அருகில் கிரட் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு பேரவை பொறுப் பாளர் எஸ்.எஸ். குருசாமி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அழகேசன், கண்ணன், சரவணன், மாரியப்பன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினர். இந்த ஊர்வலத்தை தொழிலதிபர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது முருகேசன், ஆறுமுகம், முருகவேல், ஆறுமுகம், மூர்த்தி, பிச்சைமணி உள்பட பொது மக்கள் பலர் கொண்டனர். சிறப்பு பூஜைகளை பூசாரிகள் ஜெயராமன், வீரபத்திரன் ஆகியோர் செய்தனர். இந்த ஊர்வலம் தாதம்பட்டி நீரேத்தான், பொட்டுலுபட்டி, போடிநாயக்கன் பட்டி, வாடிப்பட்டி, பொன்மலை, ராமநாயக்கன்பட்டி, பேட்டைபுதூர், லாலா பஜார், தாதப்பநாயக்கன் பட்டி வழியாக சென்று வந்தது. இதன் ஏற்பாடுகளை விநாயகர் பக்தர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.



