சென்னை, ஜூன் 28 –
தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திர குமார், பி.கே. சிவகுமார் தில்லை கோவிந்தன் ஒருங்கிணைப்பாளர்கள் சி.வி.ஆனந்த், சுந்தர்ராஜ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாரக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெயராஜேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்திட வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள புற ஆதார முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு நிரந்த பணியும் காலமுறை ஊதியமும் அளிப்பதுடன் வருவாய் துறையில் உள்ள மற்ற பிரிவினர்களுக்கு வழங்குவது போல் எந்த பாராபட்சமின்றி கருணை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும்.
நில அளவர்களின் அடுத்த கட்ட பதவி உயர்வாக உள்ள புறவட்ட அலுவலர் பணியிடங்களை அரசாணைப்படி அரசு திரும்ப வழங்காமல் வீதடிப்பு செய்து நிறுத்திவிட்டு உடனடியாக 542 குறு வட்ட அலுவலர் அளவர் பணியிடங்களை மீண்டும் திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.