கோவை, ஜூலை 08 –
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள கோ-இந்தியா அரங்கில் நடைபெற்றது. இதில் 2025-2026 ம் ஆண்டிற்கான புதிய தலைவராக வி.ஆர். ரமேஷ், செயலாளராக ஜி.எஸ். சுரேஷ், துணைத் தலைவராக கண்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக கணேஷ்குமார், உடனடி முன்னாள் தலைவராக ரகுராமன், பொருளாளராக எம்.டி. செந்தில் ராஜகோபால், சங்க நிர்வாகம் அருள் குமரன், சமூக சேவை இயக்குனராக பிரதீப் கோபால், தொழில்சார் சேவை இயக்குனராக ரம்யா ஜோதி, இளைஞர் சேவை இயக்குனராக விவேக் கனகராஜ், சர்வதேச சேவை இயக்குனராக சசிகுமார் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.ஐ 3206 மாவட்ட ஆளுநர் ஆர்.எஸ் மாருதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கோவையில் தொண்டாமுத்தூர், நரசீபுரம், அரசூர், வாகாரம்பாளையம், கண்ணம்பாளையம், காளப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 10, 11-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் 25 பேருக்கு காக்னிசன்ட் அவுட்ரீச் டீம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இயக்குனர் டி. வரதராஜன், துணை ஆளுநர் சதாசிவம், ஜி.ஜி.ஆர். மகேஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.