சேலம் ஸ்வர்ணபுரி,ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தேசிய தரச்சான்று (MABH) பெற்ற ரெயின்போ மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு (Maternity ICU ) மேம்படுத்தப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு (Neonatal ICU ), குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு (Paediatric ICU) மற்றும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை Paediatric Emergency) சேவை பிரிவுகள் திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனையில் பெண்களுக்கான மகப்பேறு சேவைகள், வலியில்லா பிரசவம், குழந்தையின்மைக்கான சிகிச்சை, உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன லேபராஸ்கோப்பி பிரிவு (கருவருதலை அதிகரிக்கும் லேபராஸ்கோப்பி) சிகிச்சை, ஒரே நாளில் வீடு திரும்பும் சிகிச்சைகள், சிறுநீரகவியல் மற்றும் ஆண் மலட்டு தன்மைக்கான சிகிச்சை, மயக்கவியல் மருத்துவம், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், முழுமைப்படுத்தப்பட்ட நவீன பிரசவ அறைகள், மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள், ஸ்கேன், எக்கோ, ஈசிஜி . மருந்தகம் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய வசதிகளுடன் மிக சிறந்த முறையில் உயர்தர மருத்துவ சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது மேலும் தனியார் மற்றும் பொது காப்பீட்டு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 650 கிராம் எடையுடன் பிறந்த பச்சிளம் குழந்தையினை மிகச்சிறப்பான மருத்துவம் மற்றும் மருத்துவர்களால் உயிர்காக்கப்பட்டு ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளோம் மற்றும் 1300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உயிர் காக்கப்பட்டுள்ளனர், 8500-க்கும் அதிகமான பிரசவங்கள் (Deliveries), 1500-க்கும் அதிகமான பெண்களுக்கு நுண்துளை (Laparoscopy Surgery) அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. 6500 க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் எங்களது அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் இரா. குமரவேல் (குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர், துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோ.ஜெயமாலா மகப்பேறு மருத்துவர், குழந்தையின்மை மற்றும் அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர்.எஸ்.அருண்சுபாஷ் (மயக்கவியல் நிபுணர்), டாக்டர். எஸ்.பிரபாகர், சிறுநீரகவியல், ஆண் மலட்டுத்தன்மை சிறப்பு மருத்துவர். சிறப்பு மருத்துவர்கள் குழு மற்றும் மருத்துவமனை மேலாளர்கள் சி. பழனியப்பன், நிர்வாக அதிகாரி ஐ. பாக்யராஜ், துணை நிர்வாக அதிகாரி ஞா.ராஜு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டனர் .



