சங்கரன்கோவில், ஆகஸ்ட் 1 –
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் மகேந்திரவாடி மற்றும் உசிலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ரெங்கசமுத்திரம் சேவை மையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமையில் நடந்த இந்த முகாமில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை அனைத்து வித கோரிக்கைகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிட நல குழு தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூலியூர் கணேசன், மகேந்திரவாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, கிளை செயலாளர்கள் அந்தோணிராஜ், பொன்ராஜ், பாபு, ராஜேந்திரன், பால்ராஜ், அரசு ஒப்பந்ததாரர் மாடசாமி ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோட்டை பாண்டி, சரவணன், சீனு, ஜெயக்குமார், பாலாஜி மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.