இராமேஸ்வரம், ஜூலை 31 –
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாண திருமண மண்டபத்தில் அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி ராமநாதசுவாமி திருக்கல்யாணம் கோவில் குருக்கள் கணேஷ் குண்டே உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 3000-க்கு மேற்பட்டோர் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் தெற்கு வாசல் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாணம் தெற்கு வாசல் திருக்கல்யாண மண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் ராமநாதசுவாமி எழுந்தருளி திருமண நிகழ்ச்சி கோயில் குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜை செய்யப்பட்டு திருமாங்கல்யம் அம்பாளுக்கு சாத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்லதுரை, உதவி ஆணையர் ரவீந்திரன், மேலாளர் வெங்கடேசன், கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி பொறியாளர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் முத்துச்சாமி, கண்காணிப்பாளர் சிவக்குமார், பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, நாகராஜன், முனியசாமி, அரசியல் கட்சி பிரமுர்கள், வட மாநில பக்தர்கள், ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை மாற்றி கொண்டனர். மேலும் பெண்கள் திருமாங்கல்ய கயிறு குங்குமம் பக்தர்களுக்கு வழங்கினர்.