ராமநாதபுரம், ஜுலை 26 –
ராமநாதபுரம் நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் நகராட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அரண்மனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் சண்முகநாதன், கவுன்சிலர் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், மூத்த நிர்வாகி குப்புராம், செய்தி தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலத்தில் மாபெரும் ஊழல் நடந்தது. இந்த ஏலத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.