போகலூர், ஜுலை 17 –
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்வு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் முருகேசன் மாவட்டத்தலைவர் தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர் காளிதாஸ், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், தலைமை நிலையச் செயலாளர் வழிவிட்ட அய்யனார், துணை செயலாளர்கள் வெள்ளா காளிதாஸ், ஹரிஹர கிருஷ்ணன்,
துணைத்தலைவர்கள் சசிக்குமார், பாலமுருகன், முன்னாள் சட்ட ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
18.07.25 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலத்தலைவர் 50-வது பிறந்தநாள் விழாவில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) அம்பேத்கர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.