போகலூர், ஜுன் 30 –
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சிறப்பு மாவட்ட பேரவை நடைபெற்றது. ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறை மகாலில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க சிறப்பு மாவட்ட பேரவைக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மன்சூர் வரவேற்புரை ஆற்றினார். பேரவை கூட்டத்தில் மாநிலத் தலைவர் ரமேஷ் துவக்க உரை ஆற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் அமெரிக்காவில் இருந்து காணொளி காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராஜசேகரன் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் துணைத் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டத் தணிக்கையாளர் திருமுருகன் சங்க செயலறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ராமநாதன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமுருகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் முனியராஜ், முடியப்பதாஸ், மாவட்ட இணை செயலாளர் ஜீவா, மாவட்ட துணைத் தலைவர் அருண்குமார், மாவட்ட தணிக்கையாளர் தேவி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை முன்மொழிந்தனர். பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் நிறைவுரை ஆற்றினார். சரவணகுமார் நன்றி கூறினார்.