போகலூர், ஜுலை 14 –
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் பயிற்சியாளர் காமேஸ் பால்ராஜ் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள் வைத்திருக்கும் தெருவோர விற்பனை செய்யப்படும் கடைகள், காய்கறி கடைகள் அனைவருக்கும் உணவு பாதுகாப்புத்துறை மூலம் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டன.
மேலும் காய்கறிகள் பழக்கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் மேளா நடைபெற்றது. இதில் சுமார் 92 பேர் தங்கள் பதிவினை பதிவு செய்து பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காய்கறி சங்கத் தலைவர் ஆனந்த் மற்றும் செயலாளர் கார்த்திக் உட்பட வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.