இராமேஸ்வரம், ஜூலை 22 –
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா அம்பாள் சன்னதியில் தங்க கொடிமரத்தில் கோவில் குருக்கள் கணேஷ் குண்டே தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆதி திருக்கல்யாண திருவிழா 19-ம் தேதியன்று தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக அம்பாள் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதணைகள் நடைபெற்றதையடுத்து ஆடித் திருக்கல்யாண திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் வருகிற 24-ம் தேதி ஆடி அமாவாசை அக்னி தீர்த்த கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல், 25-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி ரதம், 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருத் தேரோட்டம், 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை சுவாமி அம்பாள் தபசு மண்டகபடிக்கு எழுந்தருளி மாலை மாற்றுதல், அன்று இரவு பூப்பல்லக்கு, 30-ம் தேதி புதன்கிழமை இரவு தெற்கு வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், ஆகஸ்ட் 4-ம் தேதி திங்கட்கிழமை கெந்தமாதன பர்வதம் மண்டகப்படி எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்லதுரை, உதவியாளர் ரவீந்திரன், மேலாளர் வெங்கடேசன், செயல் அலுவலர் முத்துச்சாமி, கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி பொறியாளர் ராமமூர்த்தி, பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, நாகராஜன், முனியசாமி, நகர மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் அர்ஜுனன், இந்து மக்கள் கட்சி பிரபாகரன், விஷ்வ ஹிந்து பரிஷத் சரவணன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.