தென்காசி, செப். 10 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தது. மேலும் கால்நடைகள் பலியாகின. இந்நிலையில் தகவல் அறிந்து இன்று அதிகாலை முதலே சங்கரன்கோவில் மன்ற தொகுதி சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் மழையால் ஏற்பட்ட சேதங்களை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு செய்தார். தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
நரிக்குடி ஊராட்சி பெருமாள் பட்டி கிராமத்தில் நாராயணன் என்பவரது கால்நடைகள் உயிரிழந்ததை தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரூபாய் 5000 மற்றும் மேல நீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் சார்பில் ரூபாய் 5000 என மொத்தம் ரூபாய் 10,000 நிவாரணத் தொகையை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கால்நடை மருத்துவர் வசந்தா, தெற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், தொண்டரணி செல்வம், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சத்திய பாரதி, கிளை செயலாளர் வீமராஜ், பெருமாள் பட்டி கிளை செயலாளர் வீரபாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.



