ஈரோடு, மே 11,
ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டியும் மற்றும் பங்காரு அடிகளா ருக்கு புகழேந்தல் தொண்டாஞ்சலி நிகழ்ச்சியும் ஈரோடு மாவட்ட மக்களின் நலன் வேண்டி இயற்கை தெய்வங்களை வழிபட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ஈரோடு குமாரசாமி வீதியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகமான குரு பீடத்தில் நடந்தது.
ஆன்மீக இயக்க மாவட்ட பொருளாளர் இளங்கோ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் சக்திவேல் செல்வகுமார் கனகராஜ் மினி சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் நடராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கனகராஜ் ஆறுச்சாமி செயலாளர்கள் செல்வம் வேங்கடசெல்வன் பால தண்டபாணி ஜெகதீசன் முன்னாள் மாநில தலைவர் ராமசாமி சத்திய நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தொண்டர்கள் செவ்வாடை அணிந்து யாக பூஜையில் கலந்து கொண்டனர்.
இந்த யாக பூஜையும் அன்னதானமும் ஈரோடு மாவட்டத்தில் பவானி சத்தியமங்கலம் கோபி அந்தியூர் பெருந்துறை நம்பியூர் புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் மொடக்குறிச்சி அரச்சலூர் சிவகிரி மற்றும் ஈரோடு பகுதியில் சூரம்பட்டி பெரியார் நகர் உட்பட 555 இடங்களில் இந்த யாகம் நடைபெற்றது.