களியக்காவிளை, அக். 24 –
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை குழித்துறையில் நடந்தது.
குழித்துறையில் பி.எம். எஸ் சின் அலுவலக கட்டடம் கட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூமி பூஜையில் டிரஸ்டு செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் குமாரதாஸ் முன்னிலை வகித்தார். பாரதீய மஸ்தூர் சங்க அகில பாரத அமைப்புச் செயலாளர் சுரேந்திரன் ஜி, தென் பாரத இணை அமைப்புச் செயலாளர் ராஜீவன் ஜி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



