சென்னை, ஜூலை 14 –
மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை ஜோதிநகரில் பி.இசட் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த உடற்பயிற்சி கூட திறப்பு விழாவில் பி.இசட் உடற்பயிற்சி கூடத்தின் தலைவர் கஃபூர் மேத்தல், சுஃபியான் தலைமையிலும், தாம்பரம் – மேற்கு பி- இசட் உடற்பயிற்சிக் கூடத்தின் பொறுப்பாளர் அருண் தங்கராஜ் வரவேற்பிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடி பில்டிங் சங்கத் தலைவர் ஐ.சி.எஃப் அரசு, செயல் தலைவர் கோல்ட் பிரகாஷ், தலைவர் அர்ஜுனா விருதாளர் எஸ். பாஸ்கரன், பொதுச்செயலாளர் பாலமுருகன், கன்யாகுமாரி மாவட்ட பாடிபில்டிங் சங்க செயலாளார் சரவண சுப்பையா, துணைத்தலைவர் ஆல்பர்ட் நெல்சன், வின்சென்ட் ராஜ்பாபு, செங்கை மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் சங்கத் தலைவர் சந்துரு மாஸ்டர், பொருளாளர் லட்சுமிபதி, காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் பாடிபில்டிங் சங்க செயலாளார் முனுசாமி, செங்கை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜிம் உரிமையாளர்கள் சங்க செயலாளர்கள் நாகராஜ், கதிர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.