மதுரை, ஜூலை 21 –
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி. கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து எம்பி கனிமொழி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில்: மாணவர்களாக இந்த உலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
மேலும் புதிய தருணங்களை உருவாக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். புதிய அனுபவங்களை உங்களிடம் பகிர்வதற்காக பல சவால்கள் உங்கள் பாதையில் வரும். இந்த கல்லூரி அந்த சவால்களை சமாளிக்க உங்களை தயார்படுத்தும். ஒரு அவசர நிகழ்வுகளுக்காக இங்கிருந்து புறப்படுகிறேன். இங்கு பட்டம் பெற வந்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்து அவரது சகோதரர் மு.க. முத்து காலமான செய்தி கேட்டு உடனே பட்டமளிப்பு விழா மேடையில் இருந்து தனக்கு அவசரமான நிகழ்வுகளுக்காக இங்கிருந்து புறப்படுகிறேன் என்று புறப்பட்டார்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி மறைந்த சகோதரர் மு.க. முத்துவின் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி புறப்பட்டார்.