நாகர்கோவில், ஆகஸ்ட் 13 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர் தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18-8-2025 அன்று சரியாக காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களை சேர்ந்தவர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


