திருப்பூர், மே. 6:
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரனின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்தார். இந்த நிலையில் திருப்பூருக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் முன்னாள் திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன். இவர் தற்போது மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக இருந்து வருகிறார். குணசேகரனின் தந்தை சுப்பிரமணியம். குணசேகரனின் தந்தை சுப்ரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 26-ம் தேதி இறந்தார். அவரது உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று குணசேகரனின் இல்லத்திற்கு வந்து துக்கம் விசாரித்து சென்றார். மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுப்ரமணியம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குணசேகரனின் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. சிவசாமி.எம் எல் ஏ ஜெயக்குமார் வேட்பாளர் அருணாச்சலம்
சூர்யா செந்தில் நல்லூர் சேகர் பெரிய தோட்டம் முஜிபுர் ரஹ்மான் எஸ் எஸ் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



