திருப்பூர், ஆக. 6 –
திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் மக்களுக்காகவே தனது 14 வயதில் மக்கள் பணி தொடங்கி 95 வயது வரையில் தன் உயிர் மூச்சு வரை வாழ்ந்திட்ட பெருமகன், திராவிட இயக்கப் பெருந்தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அப்படிப்பட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர் கலைஞர் அவர்கள் 07.08.2018 -ம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்துச் சென்றாலும் இன்றும் நம் ஊனோடும், உணர்வோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
நாளை (07.08.2025 – வியாழக்கிழமை) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் முத்தமிழறிஞர் செம்மொழி காவலர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை உள்ள இடங்களில் திருவுருவச் சிலைக்கும், திருவுருவச் சிலை இல்லாத இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அதுசமயம் இந்நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக, வட்டக் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து கழக செயல் வீரர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.