முதுகுளத்தூர், ஆகஸ்ட் 03 –
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் – கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவர் அவரது ஆட்டுக் கிடைக்கு வந்துள்ளார். அந்த பகுதியில் மின் விநியோக கம்பி மிகவும் தாழ்வாக தொங்கி தரையில் கிடந்த மின்கம்பியில் எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரை காப்பாற்ற வந்த அவரது மகன் கிஷோர்குமார்க்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உயர் சிகிச்சைக்காக ராமநாதபரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கீழத்தூவல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.