திருப்பூர், ஆக. 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (26.8.2025) சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 4-ம் கட்டமாக காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழாவை துவக்கி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் மற்றும்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எம்.பி. அமித் மண்டலம்-4, வார்டு-36, புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 4-ம் கட்டமாக காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்கள்.
உடன் 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன், துணை ஆணையாளர் சுந்தர ராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) தங்கவேல் ராஜன், பள்ளி தலைமையாசிரியர், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.



