மார்த்தாண்டம், அக். 15 –
உண்ணாமலைக்டை முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் 51-வது வருடாந்திர நவராத்திரி திருவிழா கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த
முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சுமார் 110- அடி உயர பாறையின் நடுவில் கருங்கல்லாலான ஒன்றரை அடி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் சிலை இருந்து வந்தது. அதனை அப்பகுதி மக்கள் தினசரி பூஜை செய்தும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் பாறை பகுதியில் கோயிலும் ஒரு பக்கத்தில் காங்கிரட் சாலையும் உள்ளது. கோவிலை தாண்டி கீழ் பகுதியில் ஒன்றரை கோடி செலவில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு ஆரம்ப கட்டத்தில் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் என பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் கோயில் பாறையின் உட்பகுதியில் இருப்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது என தெரிவித்ததை அடுத்து மருத்துவமனை கட்டும் பணிக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளித்தனர். இதையடுத்து மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி கோவிலின் வெளிப்புறத்தில் இருந்த சித்தர் பீட சிவலிங்கத்தை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். இதை அடுத்து கோவில் நிர்வாகிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பத்திரகாளி அம்மன் சிலை மற்றும் உடைத்து வீசப்பட்ட சித்தார் பீட சிவலிங்கத்தையும் சரி செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைகளையும் கடந்த 11-ம் தேதி சிலைகளையும் பெயர்தெடுத்து இரண்டு வாகனங்களில் வந்த விளவங்கோடு தாசில்தார் தலைமையிலான போலீஸ்சார் சிலைகளை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வரும் முடியாம் பாறை பத்திரகாளி அம்மன் கோவில் பக்தர்கள் சங்க மகளிர் அணி தலைவர் தீபா, இந்து முன்னணி மாவட்ட தலைவர் வக்கீல் ஆறுமுகம் ,முன்னாள் இந்து முன்னணி தலைவர் மிசா சோமன், உண்ணாமலை கடை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஆனந்த், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜாண் கென்னடி மற்றும் ஆலய பக்தர்கள் இந்து கோயில் கூட்டம் அமைப்பினர் மற்றும் இந்து இயக்கத்தைச் சார்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் வக்கீல் ஆறுமுகம் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில் ; முடியாம் பாறை பத்ரகாளி அம்மன் கோவில் பல தலைமுறையினர் வழிபட்டு வந்த பாரம்பரியமிக்க கோவில் இந்த கோவில் இங்கு முன்னோர்கள் காலம் தொட்டு பக்தர்கள் சிறிய அளவில் ஆலயம் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஆலயம் மூன்று பாறைகளின் நடுவில் உள்ளது.இதனால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் பக்தர்கள் வழிபாட்டு வருகின்றனர் இதனை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் கோயிலை உடைத்து சாமி சிலைகளை எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இந்து முன்னணி சார்பில் தொடர் போராட்டம் நடத்துவதோடு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவருடன் ஆலய நிர்வாகிகள் இந்து முன்னணி மற்றும் இந்து இயக்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.



