தருமபுரி, ஆக. 4 –
தருமபுரி மாவட்டம் முக்கால் நாயக்கம்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ துர்க்கை காளியம்மன், ஸ்ரீ மாசாணியம்மன் கோவிலில் ஆடி 18-யை முன்னிட்டு 21-ம் ஆண்டு பூ மிதிப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. பால்குடம், அலகு குத்துதல், பூ கரகம் எடுத்தல், தீச்சட்டி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து பூ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் பூசாரி கிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.