தருமபுரி, ஜுன் 30 –
தருமபுரி மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு – 2025 குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வரவேற்றார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தருமபுரி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் வந்தது பாராட்டுக்குரியது. அடைவுத் தேர்வில் 22-வது இடத்தில் இருக்கிறது. இந்த தேர்வின் தேர்ச்சியில் இன்னும் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும். மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி பேசினார் . தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.