பரமக்குடி, ஜூலை 5 –
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நகர் கழக செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலையில் திமுக, தேமுதிக கட்சியிலிருந்து விலகி சுமார் 50 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு நகர் கழகச் செயலாளர் வின்சென்ட் ராஜா சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.