மார்த்தாண்டம், செப். 25 –
குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர் பைங்குளம் சிகாமணி எழுதிய கருவறை என்ற நூல் வெளியீட்டு விழா மார்த்தாண்டத்தில் நடந்தது. குமரி முத்தமிழ் மன்ற தலைவர் லாசர் தலைமை வகித்தார். மன்ற பொருளாளர் தமிழ்மாறன் வரவேற்றார். சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் நூலை வெளியிட முதல் பிரதியை குமரி முத்தமிழ் மன்ற செயலாளர் சஜீவ் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் குமரி தோழன் நூல் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நற்பணி மன்ற தலைவர் சிந்து குமார், குமரி அறிவியல் பேரவை தலைவர் வேலையன், பாரத கலாச்சார பேரவை தலைவர் பாஸ்கரன், செயலாளர் புலவர் ரவீந்திரன், மாவட்ட பாரதிய ஜனதா கூட்டுறவு பிரச்சார கூட்டுறவு பிரிவு தலைவர் மோகன குமார், குமரி முத்தமிழ் மன்ற அவைத்தலைவர் குமரேசதாஸ் , ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், முஞ்சிறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.



