மயிலாடுதுறை, ஜூலை 15 –
மயிலாடுதுறை மாவட்டத் தலைநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமைக்குற்றவியல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2, விரைவு நீதி மன்றம் ஆகிய ஒன்பது நீதிமன்றங்களும் சிறார்களுக்கான நீதிமன்றம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் இயங்கிவருகிறது. 250க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
பழமை வாய்ந்த மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் 225 வழக்கறிஞர்கள் உள்ளனர். மாயூரம் வழக்கறிஞர் சங்கமும் செயல்பட்டு வருகிறது. மாயூரம் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. சங்க தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் வரும் 25-ம் தேதி பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெறும். மாயூரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் ஷங்கமித்திரன் தலைவருக்கான தேர்தலுக்கு விண்ணப்பம் செலுத்தினார். டெப்பாசிட் தொகை ரூ.5 ஆயிரத்தையும் விண்ணப்பத்தையும் தேர்தல் நடத்தும் அலுவலர் வழக்கறிஞர் விஜயகுமாரிடம் அளித்தார்.