சிவகங்கை:மே 06
சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் திறந்து வைத்து பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களுக்கு நீர்மோர் இளநீர் சர்பத் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை உணர்ந்த தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரது ஆலோசனையின் படியும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் தமிழரசி இரவிக்குமார் தலைமையில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
அப்போது பேருந்து நிறுத்தத்தின் அருகே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டதன் காரணமாக பேருந்துகளில் பயணம் அனைத்து பொதுமக்களுக்கும் நீர்மோர் இளநீர் சர்பத் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் வழங்கினார்.
இதனை பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததுடன் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் இந்த நன்றியெல்லாம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே போய்ச்சேரும் எனவும் அவர்தான் எங்களையெல்லாம் பொதுமக்கள் பணிசெய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் துரை இராஜாமணி அண்ணாத்துரை வட்டக்கழக செயலாளர் திருமுருகன் நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி திருமுருகன்
செல்வம் பாலாஜி செல்வக்குமார் கணேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.