பரமக்குடி, ஆக. 18 –
மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பரமக்குடி மாணவர்கள் 10 பேர் முதலிடம் பிடித்த சாதனை. தமிழ்நாடு யுனைட்டட் அர்ச்சரி சாம்பியன்ஷிப் 2025, மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள் விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் சென்னை கோயமுத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பரமக்குடி மாணவர்கள் 13 பேர் பங்கேற்றனர்.
இதில் 10 பேர் முதல் இடமும், 2 பேர் இரண்டாம் இடமும், ஒருவர் மூன்றாம் இடமும் பெற்றனர். எட்டு வயதுக்குட்பட்ட பிரிவில் ஜெக்ஸன் கில்பர்ட் முதலிடமும், பத்து வயதுக்குட்பட்ட பிரிவில் தஸ்வந், ஸ்டட்ஸன் ரோஜர் முதலிடமும் அஜய் கார்த்திகேயன் இரண்டாமிடமும், சித்தார்த் முன்றாமிடமும், பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பிரிவில் டின் சாஹிம், பிரஜித் முதலிடமும், பதினான்கு வயதுக்குட்பட்ட பிரிவில் ஹரி பிரசாத், ஜஸ்வின், சுஜித், ஆஸிவ் நிக்கோலஸ், தியானேஸ் முதலிடமும், ஸ்ஆக் இரண்டாமிடமும் பெற்றனர்.
பயிற்சியளித்த மணிகண்ட பிரபு மற்றும் வெற்றி பெற்று மாணவர்களை பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.



