சென்னை, ஆகஸ்ட் 16 –
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட குரூப் 2A தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடெமியில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கிளையான நாமக்கல்லில் இரண்டாவது கட்டமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாநகராட்சியின் அலுவலக கண்காணிப்பாளர் (Group B), வருமான வரித் துறை அதிகாரி அரவிந்த் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும், அவருடைய அனுபவம் மற்றும் போட்டித் தேர்வு பற்றிய விளக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார். இந்த விழாவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நாமக்கல் கிளை மேலாளர், அருள்குமார் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



