கோவை, ஆகஸ்ட் 07 –
கோவை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இடமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் போராடியும் அவர்களின் கல்நெஞ்சை கரைக்க இயலாமல் கட்டாய கல்வி உரிமை சட்ட உரிமையை இந்த ஆண்டு ஏழை குழந்தைகளுக்கு பெற்றுத் தர முடியவில்லை.
இதுவரை கோவையில் பல போராட்டங்கள் நடத்தியும் சென்னையில் பல போராட்டங்கள் நடத்தியும் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக போராடியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராடியும் பார்த்து விட்டோம்.
கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தோம். புதிய கல்விக் கொள்கையையும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தையும் இணைத்து பார்க்க கூடாது என்றும் மத்திய அரசு பணம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில் அந்தப் பணம் வரும் வரை காத்திருக்காமல் இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு தமிழக அரசிற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப் பின்பும் மத்திய, மாநில அரசுகள் சட்டத்தை அமுல்படுத்தாமலும் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமலும் புறக்கணித்தனர். எங்கள் சக்திக்கு மீறி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மீட்டெடுக்க அனைத்து வழிகளையும் முயற்சி செய்து விட்டோம்.
இந்த ஆண்டு இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி உரிமையை பெற்றுத் தர முடியவில்லை என்பதற்காக தமிழ்நாட்டு குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு எங்களை நாங்களே பிரம்பால் அடித்துக் கொண்டு தண்டனையை நிறைவேற்றி கொள்கிறோம் என்று தெரிவித்தார்.