வேலூர், மே. 12-
வேலூர் மாவட்டத்தின் மருந்து வணிகர்கள் சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் ஒடிசி மருந்துகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்க மத்திய அரசு உத்தேசித்து உள்ளதையடுத்து நம்முடைய டிஎன்சிடிஏ அறிவுறுத்தலின் பேரில் வேலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பாக வேலூர் மாவட்ட தலைவர் மோகன் வேலூர் மாவட்ட செயலாளர் துரை கண்ணன், பொருளாளர் காந்தி அவர்கள் மற்றும் அட்மின் துரை அட்மின் முருகானந்தம் ரீடெய்ல் விங் சேர்மன் புருஷோத் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.இதில் மருந்து வணிக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.