திருச்சி, ஜுன் 5 –
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் வெள்ளை பிச்சம்பட்டியைச் சேர்ந்த உஷாபிரியா (21) என்பவர், ஆறு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், அகரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணியை திருமணம் செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தாய் வீட்டில் இருந்த உஷாபிரியா, தனது தோட்டத்தில் அரளி விதையை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
மணப்பாறை சுகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


