மயிலாடுதுறை, செப்டம்பர் 02 –
மயிலாடுதுறை கண்ணார் தெருவில் பழமை வாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நான்காம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின நேற்று இரவு முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்ற நிலையில் இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை திருவாவடுதுறை ஆதின 24-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று துவக்கி வைத்து சாமி தரிசனம் மேற்கொண்டார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



