கன்னியாகுமரி, செப். 27 –
மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமிற்கு பள்ளியின் தலைமையாசிரியை புஷ்பலதா தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் எமில் ஜெரோம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் கால்வின் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்த்தலின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜாஸ்பர் ஏஞ்சலா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக தாவரவியல் ஆசிரியை கிறிஸ்டி பொன்மலர் அனைவரையும் வரவேற்றார். முகாம் நிகழ்வின் இடையிடையே மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவில் தமிழாசிரியை ரூபி அமலா நன்றி கூறினார். நிகழ்வில் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



