ராமநாதபுரம், ஏப்.3-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக மமக சார்பில் தலைவர் காதர் தலைமையில் ஈகை திருநாளை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் மமக தொண்டி பேரூர் 15வது வார்டு கவுன்சிலர்
பெரியாசாமி, மகளிரணி மாவட்ட பொருளாளர் 14வது வார்டு கவுன்சிலர் ஷமிமா பானு ஆகியோர் ஏற்பாட்டில்
தமுமுக மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி பொறியாளர் ரகு, தமுமுக மகளிர் அணி செயலாளர் ஷெரிபா ஜைனுல் ஆப்தின் ஊடகபிரிவு பஹுருல்லாஹ் அப்துல்லாஹ் மைதின் எம்.ஆர். பட்டணம் அலாவுதின் . பாசி நெய்னா
அஹமது இப்ராஹிம் நிசார் அப்துல்ரஹிம் ஜலால் கோவை நைனா ஆகியோர் முன்னிலையில்
தொண்டி பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள்,
வடிகால் வாரிய ஊழியர்கள் மின்சார வாரிய பணியாளர்கள் பேரூராட்சி மக்தூர் பெண் பணியாளர்கள் என அனைவருக்கும் சால்வை அனிவித்து பகல் உணவு பேரூராட்சி கவுன்சிலர்கள்
சமீமா பானு
பெரியசாமி ஆகியோர் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொண்டி மனிதநேய மக்கள் கட்சி தமுமுக நிர்வாகிகள் செய்திருந்தனர். மனித நேய மக்கள் கட்சி தொண்டி பேரூராட்சி செயலாளர் பரக்கத் அலி நன்றி கூறினார்.



