மார்த்தாண்டம், ஜூலை 25 –
வாவறை ஊராட்சிக்குட்பட்ட மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி தேவஸ்தான கோவிலில் கோவில் பயன்பாட்டிற்கு கலையரங்கம் அமைத்து தர வேண்டும் என்று கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கிள்ளியூர் எம்எல்ஏ விடம் கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் கோவில் பயன்பாட்டிற்கு கலையரங்கம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கலையரங்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இதன் கட்டிட பணிகள் முடிவடைந்ததையடுத்து கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
கலையரங்கத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், வாவறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னப்பர், வாவறை ஊராட்சி முன்னாள் தலைவர் மெற்றில்டா, மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் லூயிஸ், முன்னாள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கிறிஸ்டல் பாய், வென்சஸ்லாஸ் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.