திருப்புவனம், ஆகஸ்ட் 9 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாடு முன்னிட்டு சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிவகங்கை தெற்கு ஒன்றியம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி திருப்புவனம் மானாமதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் CT நிர்மல் குமார் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு மாநாடு குறித்து ஆலோசனை வழங்கினர்.
இதில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “மதுரை மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும். மேலும் மாநாட்டிற்கு பஸ் கொடுத்தா என்ன! வேன் கொடுத்தா என்ன! தலைவர் கோஷம் பாதயாத்திரையாக வந்துவிடுவார்கள். விக்கிரவாண்டி மாநாட்டில் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதேபோல் மதுரை மாநாடு முடிந்தும் தளபதியை முதல்வராக மக்கள் ஏற்பார்கள். 2026 மகளிர் காண பாதுகாப்பாக ஆட்சியை தலைவர் அமைப்பார்” என்று பேசினார்.