சோழவந்தான், செப். 27 –
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு ஶ்ரீ சுந்தரவள்ளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு விழாவினை அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் Ex.MLA பங்கேற்று துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார். விழாவில் அதிமுக நிர்வாகிகளும், கிராம பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.



