திருப்புவனம், ஜுன் 28 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய உட்பட்ட பூவந்தியில் அமைந்துள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியானது பூவந்தி காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி மதுரை சிவகாசி நாடார் கல்லூரி வளாகத்திலிருந்து பூவந்தி கிராமம் முழுவதும் ஒவ்வொரு வீதியாக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பூவந்தி காவல் ஆய்வாளர் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் கூறினார். இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.